Stay Signed In
Do you want to access your site more quickly on this computer? Check this box, and your username and password will be remembered for two weeks. Click logout to turn this off.
Stay Safe
Do not check this box if you are using a public computer. You don't want anyone seeing your personal info or messing with your site.
அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் காலமானார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், லண்டனின் இன்று வியாழக்கிழமை காலமானார்.
35 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு நோயால் பாதிப்புற்றிருந்த இவர், 90களின் பிற்பகுதியில் சிறுநீரக மாற்றீடு செய்துகொண்டார். இவருக்கு புற்றுநோய் பரவியிருந்தமை, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த இவர், தனது 68வது வயதில், காலமானார். இவரது உயிர்பிரியும் வேளை, இவரது பாரியார் அடேல் பாலசிங்கம் உடனிருந்தார்.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நேரடி ஈடுபாடு கொண்டிருந்த பாலசிங்கம் அவர்கள், 1985ம் ஆண்டு முதல் பல்வேறு பேச்சுவார்த்தைகளிலும் நேரடியாகப் பங்கெடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்தவர் அன்ரன் பாலசிங்கம்
ஊடக அறிக்கை
மதியுரைஞரின் இல்லம்
லண்டன்
14.12.2006
ஊடக அறிக்கை
தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இதயத்தில் விடுதலைக் கனலை சுமந்து இறுதிவரை ஓயாது உழைத்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான மதிப்புக்குரிய கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், இன்று காலமாகியுள்ளார்.
தமிழினத்தின் அடிநாதமாக, தமிழீழ தேசியத் தலைவரின் குரலாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூச்சாக நின்ற, மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், இன்று எம்மை விட்டு பிரிந்து விட்டார். இன்று பிற்பகல் 1:45 மணிக்கு, மதியுரைஞரின் உயிர் மண்ணுலகில் இருந்து பிரிந்தது.
தனது சொல் வன்மையாலும், ராஜதந்திர மதியூகத்தாலும், அணையாத விடுதலை வேட்கையாலும், தமிழீழ மக்களையும், உலகத் தமிழர்களையும், ஆட்கொண்ட மதியுரைஞர், இன்று எம்மைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். எல்லோரது இதயத்திலும் இடியாக விழுந்துள்ள மதியுரைஞரின் பிரிவால் தமிழினம் துடித்து நிற்கின்றது.
சத்தியத்தை சாட்சியாக வரித்து, தணியாத விடுதலை வேட்கையுடன் வாழ்ந்து, வீறுகொண்ட விடுதலைப் போராட்டத்தை அடிநாதமாகக் கொண்டு, தமிழ் மக்களை ஆழமாக நேசித்து, தமிழீழத்தின் ராஜகுருவாக திகழ்ந்த மதியுரைஞரைப் பிரிந்து, தமிழினம் ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது. உயரிய சத்தியத்திற்காக வாழ்ந்து, விடுதலைக்கு விதையாகி வீழ்ந்த மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், என்றென்றும் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார்.
காத்தான்குடியில் வன்முறை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் (படங்கள் உள்ளே)
மட்டக்களப்பு காத்தான்குடியில் எட்டாவது நாளாக தொடரும் வன்முறைகளால் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சூபி முஸ்லிம் இயக்கம் மற்றும் அகில இலங்கை தாருகாதுல் முபிஹீம் இன் தலைவர் அப்துல் பயில்வானின் காத்தான்குடியில் புதைக்கப்பட்ட உடலை அகற்றி வேறு இடத்தில் புதைக்கக கோரி சூபி முஸ்லிம் இயக்கத்திற்கு எதிரானவர்கள் இன்று காத்தான்குடியில் பொலிஸ் சோதனைசாவடி. ஆட்டோ, வங்கிகளிற்கு தீ வைக்கமுற்பட்டனர்.
நிலமையை கட்டுப்படுத்துமுகமாக பொலிஸார் திறந்த துப்பாக்கி பிரயோகத்தையும், கண்ணீர் புகையையும் வீசியுள்ளன. தொடர்ந்து தற்போது பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காத்தான்குடி தாருகாதுல் முபிஹீன் பள்ளிவாசலில் புதைக்கப்பட்ட அப்துல் பயில்வானின் உடலை அகற்றகோரி கடந்த 8 நாட்களாக காத்தான்குடியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.இன்று வன்முறைகளின் போது காத்தான்குடி பொலிஸ் சோதனைச்சாவடி,ஹற்றன் நாஷனல் வங்கி,இலங்கை வங்கி. பாங் ஒப் சிலோன் மற்றும் இரு கடைகளிற்கு தீ வைத்துள்ளனர்..
மியான்குளத்தில் ஆயுதங்களற்ற மருத்துவ அணி மீது கோழைத்தனமான தாக்குதல் - இளந்திரையன்
மட்டக்களப்பு மியான்குள தாக்குதல் குறித்து பதிவு இணையத்தளத்திற்குகு கருத்துரைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரரையன்:
நேற்று மாலை வாகரையிலிருந்து காயமடைந்து சரணடைந்திருந்த சிறீலங்கா அரச படையினரையும் காயமடைந்த சில போராளிகளையும் மேலதிக சிகிற்சைக்காக குடும்பிமலைப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லும் போது ஆயுதமற்ற முறையில் சென்ற மருத்துவ அணியை சிறீலங்கா அரச படையினர் கோழைத்தனமான முறையில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
அந்த அணியுடன் வாகரைப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினரின் செல்வீச்சு காரணமாக அச்சமடைந்து அப்பிரதேசத்தை விட்டு வெளியேற விரும்பிய அதேவேளை சிறீலங்கா அரச படைகளின் ஆக்கிரமிப்பு பகுதியில் வாழ விரும்பாத சில இளைஞர்களும் விடுதலைப் புலிகளின் வேறு பிரதேசங்களுக்கு செல்லவதற்காக சில இளைஞர்களும் அந்த அணியில் வந்திருந்தார்கள்.
இந்த அணியைத்தான் சிறீலங்கா அரச படையினர் மிகத் கோழைத்தனமான முறையில் தாக்கியிருக்கிறார்கள். 6 பேரின் உடல்கள் வாளைச்சேனை மருத்துவமனையில் இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மருத்துவ மனையில் இருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலதிக விபரங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.
தாக்குதல் குறித்து அரச தரப்பினர் தெரிவிக்கையில் நேற்று இரவு 10.30 அளவில் வாகரையில் இருந்து கரடியனாறுக்கு காயமடைந்த போராளிகளை கொண்டு சென்ற மருத்துவ போராளிகள் மீது சிறீலங்கா படையினர் நடாத்திய தாக்குதலில் 5 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் ஒக்ரோபர் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் கைதுசெய்யப்பட்ட இராணுவவீரர் ஒருவரை தாங்கள் மீட்டுள்ளதாகவும் சிறீலங்கா படையினர் செய்தி வெளியிட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது 9 போராளிகள் காயமடைந்தள்ளதாகவும் இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பாவிப் பொதுமக்கள் மீதான கடுமையான எறிகணைத் தாக்குலை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்களைத் தாக்குவது மனித உரிமைகளை மீறுவதாகும் என சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மீண்டும் தீவிரமடைந்துள்ள உள்நாட்டுப் போரில் இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 1,200-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.
மேலும் கிழக்கில் தொடரும் தாக்குதலால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவும் போர்நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் இராணுவம் நடத்தி வரும் கடும் தாக்குதலால் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்களை கவசமாகப் விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர் என இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
கிட்டத்தட்ட 30,000 முதல் 35,000 வரை இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், வாகரையில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கின்றனர். 3,000-க்கும் அதிகமான சிங்கள மக்கள் அரசாங்கத்தின் வசமுள்ள பகுதியில் வசிக்கிறார்கள்.
"வாகரை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை உரிமைகளே நசுக்கப்பட்டுள்ளன" என்று இடைக்கால ஐ.நா பிரதிநிதியும் மனித உரிமை ஒருங்கிணைப்பாளருமான அமின் ஆவட் கூறியுள்ளார்.
பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேரடியாகத் தாக்குதல்களை நடத்துவது அதிகார துஸ்ப்பிரயோகமாகும். இராணுவச் செயற்பாட்டுகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் தடை எதுவும் இல்லாமல் சுதந்திரமாக நடமாடுவதற்குப் பொதுமக்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
கலிஸின் சகலதுறை ஆட்டத்தால் மோசமான தோல்வியை சந்தித்தது இந்தியா
தென்னாபிரிக்காவுடன் விளையாடிய முதல் போட்டியிலேயே இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்திய அணி இதில் 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்போது தென்னாபிரிக்காவுக்காக அபாரமாக ஆடி கலிஸ் பெற்ற 119 ஓட்டங்களைக் கூட ஒட்டுமொத்த இந்திய அணியால் (91) எடுக்க முடியாமல் போனது.
ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி நேற்று முன்தினம் தென்னாபிரிக்காவுடன் இரண்ட??997;து ஒரு நாள் போட்டியில் மோதியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த முதலாவது போட்டி நாணய சுழற்சி கூட போடப்படாமல் மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை டர்பன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இந்த போட்டியில் காயம் காரணமாக செவாக் இடம்பெறவில்லை. அதேபோன்று அனில் கும்ப்ளே, இர்பான் பதான் ஆகியோரும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. தென்னாபிரிக்க அணியில் சுழற்பந்துவீச்சாளர் ரொபின் பீட்டர்சனுக்கு பதில??965; லங்வெல்த் இடம்பெற்றார். முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தென்னாபிரிக்க அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் சஹிர் கான். அவர் தொடர்ச்சியாக ஸ்மித் (01) பொஸ்மர்னின் (22) விக்கெட்டுகளை பதம் பார்த்தார். இதன் பின்னர் முனாப் படேலும் கிப்ஸை 2 ஓட்டத்துடன் அரங்கு திரும்பச் செய்தார். இந்நிலையில் 63 ஓட்டங்களுக்கு 3 விக்??965;ட்டுகளை இழந்து தடுமாறிய தென்னாபிரிக்க அணியை கலிஸ், டிவில்லியர்ஸ் ஜோடி மீட்டது. இருவரும் இணைப்பாட்டமாக 87 ஓட்டங்களைப்பெற தென்னாபிரிக்க அணி வலுவான நிலையை அடைந்தது.
இதேவேளை, சிறப்பாக ஆடிவந்த டிவில்லியர்ஸ் மொங்கியாவின் பந்துக்கு அநாவசியமாக ரிவர்ஸ்விப் அடிக்க முயன்று 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பௌச்சர் 28 ஓட்டங்களுடனும் கெம்ப், பொலக் முறையே 8, 0 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
என்றாலும் ஒருமுனையில் சிறப்பாக ஆடி வந்த கலிஸ் ஒரு நாள் போட்டிகளில் தனது 14 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் இந்திய அணிக்கெதிராக கலிஸ் பெற்ற முதல் சதம் இதுவாகும். ஜக் கலிஸ் இந்த போட்டியில் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 160 பந்துகளுக்கு முகம் கொடுத்து 15 பௌண்டரிகள் அடங்கலாக 119 ஓட்டங்களை பெற்றார். இறுதியில் தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது. இந்தியாவுக்காக பந்துவீச்சில் படேல், சஹீர்கான், அகர்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
249 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலெடுத்தாட களமிறங்கிய இந்திய துடுப்பாட்ட வீரர்கள் தென்னாபிரிக்க பந்துவீச்சின் முன் சரணடைந்தனர். தனது முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் களமிறங்கிய வசீம் ஜாபர் பொலக்கின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஓட்டங்கள் பெறாமல் அரங்கு திரும்பினார். பின்னர் வந்த கைப்பும் அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. அவரும் பொலக்கின் பந்தில் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் நம்பிக்கை நட்சத்திரங்களான டிராவிட் 18 ஓட்டங்களுடனும் சச்சின் 35 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இந்தியாவின் வெற்றி எதிர்பார்ப்பு சிதைந்தது. இருவருக்கும் பின்னர் வந்த வீரர்களில் தோனி தவிர்ந்த அனைவரும் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழக்க இந்திய அணி 91 ஓட்டங்களுக்கே சுருண்டது. இந்தப் போட்டியில் இந்தியா 29.1 ஓவர்களுக்கு மாத்திரமே முகம் கொடுத்தது .
இதன்படி இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் தனது இரண்டாவது மோசமான தோல்வியை சந்தித்தது. அத்துடன் இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் இதுவாகும். தென்னாபிரிக்க அணிக்காக பந்துவீச்சில் அன்ட்ரூ நெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோன்று துடுப்பாட்டத்தில் சோபித்த கலிஸ் பந்துவீச்சிலும் தனது திறமையை வெளிக்காட்டினார். அவர் 4.1 ஓவர்கள் பந்துவீசி 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாகவும் கலிஸ் தெரிவானார்.
விண்வெளிக்கு 520 பயணிகள் சுற்றுலா பயணம்: ரூ.92 லட்சம் கட்டணம் செலுத்தி ராக்கெட்டில் செல்கிறார்கள்
அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி உள்பட 16 நாடுகள் இணைந்து விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக்கூடத்தை அமைத்து வருகின்றன. இந்த ஆய்வுக்கூடத்துக்கு ராக்கெட்டில் அவ்வப்போது சுற்றுலா பயணிகளையும் அனுப்பி இந்த திட்டத்துக்கு நிதி திரட்டி வருகிறது. இதுவரை ஒரு பெண் உள்பட 4 பேர் விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளனர்.
இப்போது வெர்ஜின் கலாட்டின் என்ற நிறுவனம் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல பயணிகளின் பெயர்களை பதிவு செய்து வருகிறது.
2008-ம் ஆண்டு மட்டும் 520 பயணிகள் விண்வெளிக்கு இந்த நிறுவனம் சுற்றுலா செல்ல அனுப்பும் ஒரே ஆண்டில் 100 தடவை ராக்கெட்டுகளை அனுப்ப இருக்கிறது. இதற்காக பெயர் பதிவு செய்த முதல் 100 பேரில் 2 பேர் சீனர்கள்.
விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ஒவ்வொரு பயணியும் ரூ.92 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். 3 மணி நேர விண்வெளி சுற்றுலா பயணத்தில் 30 நிமிடம் அவர்கள் விண்வெளியில் தங்கி இருப்பார்கள். 5 நிமிடம் புவி ஈர்ப்பு விசை முற்றிலும் இல்லாத பகுதியில் மிதப்பார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் விண்வெளிக்கு சுற்றுலா சென்ற பெண் 11 நாட்கள் அங்கு தங்கி இருந்தார்.
ஓசையில்லா விமானம் வடிவமைப்பு
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் மாசச்யூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஓசையில்லா விமானத்திற்கான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பை வெளியிட்டுள்ளார்கள்.
எஸ் ஏ எக்ஸ் 40 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் எழுப்பும் ஓசையானது, விமான நிலைய எல்லைகளுக்கு வெளியே உணர முடியாததாக இருக்கும்.
மற்ற மரபு ரீதியான விமானங்களை விட இந்த விமானம் குறைந்த அளவே எரிபொருளை உபயோகிக்கும்.
மூன்று வருட உழைப்பின் பலனாக இந்த வடிவமைப்பு உருவாகியுள்ளது.
இந்தப் புதிய வகை விமானத்தின் உருவம், வளையும் இறக்கைகள் வடிவமைப்பு எனக் கூறப்படும் திட்டத்தின்படி அமையும்.
ஒழுங்கற்ற பரப்பினால் ஏற்படும் காற்றுக் கொந்தளிப்பால் தான் விமான ஓசைகள் ஏற்படுவதால், இந்த விமானத்தை வடிவமைத்தவர்கள், எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு அதன் வெளிக்கட்டமைப்பை வழவழப்பாக செய்துள்ளனர்.
இது போன்ற இலகுவான வடிவமைப்புடைய விமானங்களால், விரைவாக விண்னில் எழும்ப முடியும், மேலும் தரையிரங்கும் போது ஓடுபாதையை நோக்கி மெதுவாக இறங்க முடிவதால், மரபு ரீதியான மற்ற விமானங்களை விட ஓசை குறைவாக இருக்கும்.
விமானம் ஏறும் போதும் தரையிரங்கும் போதும் விமானத்தைச் சுற்றி ஏற்படும் காற்றுக் கொந்தளிப்புத் தான் விமானத்தினால் ஏற்படும் ஓசைக்கு காரணம்.
இந்தப் புதிய வடிவமைப்பின் மூலம், விமானத்தின் மேற்பரப்பின் ஊடேச் செல்லும் காற்றின் கொந்தளிப்பானது விமானத்தின் பின்பகுதியிலுள்ள கொந்தளிப்பற்ற காற்றை எதிர்கொள்ளும் போது, ஒருவிதமான சமன் ஏற்பட்டு விமான ஓசை குறைகிறது.
நடிகர் சிம்பு சம்பள சிக்கல் தீர்ந்தது தீபாவளிக்கு ரிலீசாகிறது "வல்லவன்'
சென்னை : நடிகர் சிலம்பரசன் கூடுதல் சம்பளம் கேட்டதால் "வல்லவன்' படம் தீபாவளிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கல் நேற்று சுமூகமாக முடிந்ததால் தீபாவளிக்கு இப்படம் வெளியிடப்படுகிறது.நடிகர் சிலம்பரசன் நயன்தாரா, ரீமாசென், சந்தியா நடிக்க "வல்லவன்' படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிலம்பரசன் இயக்கியுள்ளார். தீபாவளிக்கு வெளியிடப்படுவதாக தயாரிப்பாளர் தேனப்பன் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். படத்திற்கான சம்பளப் பிரச்னை முடிக்கப்படாமல் படத்தை வெளியிடக் கூடாது என்று சிலம்பரசன் சார்பில் அவரது அப்பா விஜய ராஜேந்தர் நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் செய்தார்.""சிலம்பரசனுக்கு பேசியபடி சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. படத்தை முடித்து தருகிறேன் என்ற தேதியில் சிலம்பரசன் முடித்து தரவில்லை. இதனால் கோடிக்கணக்கில் கூடுதல் செலவாகியுள்ளது,'' என்று தேனப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்தார். இதனால் நேற்று முன்தினம் இரு தரப்பினரிடையேயும் பிரச்னை ஏற்பட்டது. பிரச்னை முடிந்து தீபாவளிக்கு படம் வருவது கேள்விக்குறியாக இருந்தது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகியோர் இப்பிரச்னை குறித்து விஜய ராஜேந்தருடன் பேசினர். இதில் பிரச்னை சுமூகமாக முடிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி "வல்லவன்' படம் தீபாவளிக்கு திரையிடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.....
No. of Votes: 0 Avg. Rating: 0
Meter Started: Dec 14, 2006
இந்த வலையகத்திற்கு மற்ற வலையங்களில் இணைந்துள்ள உள்ளடங்கங்களுக்கும் இணைப்புகளுக்கும் எவ்விதமான குற்றத்திற்கான பொறுப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இவ்விணையத்தளத்தில் வெளிவரும் ஆக்கங்களை மாற்றங்களின்றி
வணக்கம் தமிழ் மேற்கோள்காட்டி மறுபிரசுரம் செய்யலாம்.